யாம் கண்ட ஆடவர்களிலே உம்மை போல் இனி ஒருவர் காண்பேனோ?
என் பெண்மைக்கு பேரிடர்!
உன் ஆண்மையின் ஆளுமையால்!
உன் ஆண்மையின் ஆளுமையால்!
என் சிலக் கவிதைகளுக்கும்..
பல நினைவுகளுக்கும் தலைவன் நீ..
பல நினைவுகளுக்கும் தலைவன் நீ..
வன்மையும் மென்மையும் உணர்ந்து,
பாசத்தையும் பரிவையும் அல்லவா பரிசளித்தாய்!
பாசத்தையும் பரிவையும் அல்லவா பரிசளித்தாய்!
பார்த்தபோதெல்லாம் பரவசம்...
பருவம் மொத்தமும் உன்வசம்...
பருவம் மொத்தமும் உன்வசம்...
அகவைக்குள் தான் அகப்படவில்லை.
ஆசைகளுக்கோ அளவேயில்லை.
ஆசைகளுக்கோ அளவேயில்லை.
உடற்கட்டின் உற்சவத்திற்கு!
உள்ளம் ஊசலாட்டம்!
உள்ளம் ஊசலாட்டம்!
ஒழுக்கத்தின் உயர்விற்கு!!
உயிர் வெள்ளோட்டம் தான்!!
உயிர் வெள்ளோட்டம் தான்!!
"இந்த பிறவியில் ரசித்தே
புசித்தேன்,
அடுத்த பிறவியில் அடைந்து ஆராதிப்பேன்."
அடுத்த பிறவியில் அடைந்து ஆராதிப்பேன்."
No comments:
Post a Comment