Wednesday, 28 June 2017

நேயர் விருப்பம்

நேயர் விருப்பம்:
Sangavi Narendran மற்றும் Manisha Pugalendhi
என் இச்சைகளுக்கு ஏற்ப இசைத்த நீ!
உன் பருவத்திற்கும் பதில் பகிர்ந்தாய் !
சிற்றின்ப அவா...
பேரானந்த பிரளயம் ஆனதோ?
உருகவோ?
மறுகவோ?
முனகவோ?
உந்தியும் உறழ்ந்தும்...
வாரியும் வடித்தும்...
கொண்டுவிட்டு கொடுப்பதோ?
இல்லை
தந்துவிட்டு தகிப்பதோ?
வருடவும் செய்தாய!்
வதைக்கவும் செய்தாய் !
மஞ்சத்தை நெஞ்சம் கொண்டே வென்றாய்!
இங்கு ஏகாதிபத்தியத்தை அனுமதிக்க என்ன? 
ஆராதனையே செய்கிறேன்!

நீ தீண்ட.. நான் தயங்க...
நீ தேட.. நான் ததும்ப...

No comments:

Post a Comment