Wednesday, 28 June 2017

நீயும்! நானும்!

நீயும்!
நானும்!
நானோ உன் ஆசை பள்ளத்தாக்கில் பரித்தவித்தேன் மீட்டெடுக்க வருவாயென...
நீயோ வந்து முழுவதுமாய் என்னை நிறைத்துக் கொண்டாய்!
நீயோ கைநெகிழாத பற்றுதல் வேண்டி நிற்பவன்!
நானோ இறுக பிடித்துக் கொள்ள பிடிமானம் தேடுகின்றேன்!
நானோ ஆசையில் தத்தலிக்கிறேன்!
நீயோ அன்பில் அரண் செய்கிறாய்!
நீயோ தமிழில் தொலைவோம் என்கிறாய்!
நானோ வாழ்வில் பயணிக்கலாம் படைப்புகளோடு என்கிறேன்!
நீயோ மொத்தக் கவிதையையும் உண்ட மயக்கத்தில்....
நானோ மொத்தக் கவிதையையும் கொடுத்த தயக்கத்தில்....
என்னுயிர்த்துடிப்போ?
உன்னுயிர்த்துடிப்போ?
நம் 
இன்னுயிர்த்துடிப்போ?

நானும்!
நீயும்!

No comments:

Post a Comment