இணைக்கலசங்கள் இரண்டின் நடுவே மாரனின் தந்தம்!
Monday, 4 September 2017
அறிவுரகைளை அபுறப்படுத்திக் கொள்ளுங்கள்
மனிதர்களின் வாழ்வில் இல்லாதவைகளின் வெறுமை எவ்வளவு குடிகொண்டிருக்குமோ, மனநிறைவும் ஏதோ ஒன்றிலாவது கிடைக்கும். அனாவசிய இரக்கங்கள், அனுதாபங்கள், அறிவுரைகள், யோசனைகள் கொண்டு திணிப்பது எதற்கு? அவரவர் வாழ்வை அவரவர் வாழட்டும்.
ஏய் நீ! கொஞ்சம் சிந்திஇஈ!
உன் நம்பிக்கைக்கு உடன்பட்டு, எண்ணங்களை ஆமோதித்து, செயல்களை அங்கீகரித்தாலே உன்னால் உனக்கான கடவுளாக என்னை ஆக்காதே.
ஏய் நீ! கொஞ்சம் சிந்திஇஈ!
யூஊஉறவுகள்
என்ன தான் பந்தம் பாசம் அன்பு பரிவு என்று உருகினாலும், ஒரு கட்டத்தில் தேவைகளாவும், பயன்பாடுகளாவும் மிஞ்சிவிடுகின்றன இந்த யூஊஉறவுகள்.
பதில் கடிதம்!
உன் கண்ணீர் முத்துக்களை நான் ஆனந்த ஊற்றாகவே உருவெடுக்கச் செய்வேன். அந்த ஆனந்த ஊற்றை மடியில் அல்ல உயிரில் ஏந்தி நெகிழ்ச்சியாக மட்டுமே உனக்கு பரிசளிப்பேன். நீ அவளோடு அவர்களாக இருந்த தருணங்களே இப்பொழுது நீ என்னோடு நாமாக இருக்க அரும்பியது. நீ உன் கோபங்கள், வலிகள், குரோதங்கள், ஆத்திரங்கள், அனுமானாங்கள், ஆசைகள், ரசனைகள், இன்பங்கள், நெறிமுறைகள், கொள்கைகள். இவற்றின் கூட்டாக உன் ஆதிமனதை கிரகித்து அணுத்துகள் தவரவிடாமல் ஆலிங்கனம் செய்வேன். மெய்க்காதலை கவிதையாக்கி, உணர்வுகளை கதை களமாக்கி தமிழுள் தொலைந்து உயிர்காதலை இயம்புவோம்.
தமிழை மடித்து அல்ல உயிர்த்து தருகிறேன் உன்னையே உலர்த்தி எடுக்க. உன் சிறு கோபத்தின் உண்மை, சுடும் சொற்களின் நேர்மையை நன்கு புரிந்துணர்வேன். நீ உன்னை கலையாய் தீட்டும் பொழுது வண்ணங்களை சேர்க்கும் துரிகயாய் தரித்துருப்பேன். உன் உச்சியையும் உச்சத்தையும் நனைக்க உடலோடு சேர்ந்து உயிரோடு வாழ்வேன். சொல்லிட நினைத்தவை நெஞ்சோடு நிற்க, புரிதலை சுட்டிட சேர்ந்து வாழ்ந்து காட்டுகிறேன் உன்னோடு தமிழாக.
Opportunity costs in life!
வாழ்க்கையின் எந்தவொரு நிகழ்வாகட்டும், மாற்றமாகட்டும், கற்றுக் கொள்கின்ற பாடமாகட்டும், எடுக்கப்படும் முடிவுகளாகட்டும், எதிர்வினை செயல்படுகளாகட்டும். இவை அனைத்திற்கும் நாம் கொடுக்கும் விலையின் வித்தியாசங்களை புரிந்துக்கொண்டால், வாழ்வினை அளந்துக்கொள்ளலாம்.
விளையாட்டு
வாழ்க்கையே ஒரு விளையாட்டு. விளையாட்டான ஒரு வாழ்கை.
விவரங்கள், விவகாரங்கள், விபரீந்தங்கள், வினோதங்கள், விகல்பங்கள், விமர்சனங்கள், விசித்தரங்கள் நிறைந்த ஒரு வித்தியாசமான விளையாட்டு
Take me!
Take me!
Through your clenching jaws.
Through your fastening breathe.
Through your smoldering eyes.
Through your pounding thrust.
Through your pacing heart.
Through your rising soul.
Take me!
இளங்சூரியனின் மஞ்சள் அம்புகள், நீ புத்தகத்துக்குள் பொதிந்து பொருள்தேடும் கம்பீர நளினத்தின் மேல் பாய்ந்து உன் நிழலை நம் வீட்டின் மூங்கில் பாய்கள் மீது எய்தின. அந்த ஒளிச்சிதறல்களை கண்களால் ஒருங்கிணைத்து வாரி அணைக்கும் சுகந்த நொடிகளில். புத்தக அலமாரியில் நம் காதல் பற்றுகையின் இடறலில், புத்தகங்கள் சரிகையில் நாம் சேர்கையில் நூல்களுகிடையே இயற்றிய புது பாராயணம்.
வீட்டு சாப்பாட? வீட்ல மரியாதையா?
The no of times you visit home is inversely proportional to the amount of கவனிப்பு, உபசரிப்பு, மரியாதை you receive.
#HostelThug Life.
கற்றுக்கொண்ட கசப்பான பாடம் in UG.
Hence proved in PG.
அடக்க முடியாத, வழிப்பட இயலாத போதை
Marijuanaவில் இல்லாத மயக்கம்
Magic mushroomsயில் இல்லாத மருட்சி
Wineயில் இல்லாத அலாதி
Hookahவில் இல்லாத களிப்பு
அடக்க முடியாத, வழிப்பட இயலாத போதை
உன் கண்களில்!
BombayJayashree
விவரிக்க முடியாத வர்ணிக்க இயலாத ஒரு உயிரின் தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறேன் உன் ஆதிமன குரலோசையில்!
#BombayJayashree
❤
வாழ்க்கைத் திருவிழா
வாழ்க்கைத் திருவிழாவில் இணைவதும் பிரிவதும் சுயேச்சையாக நடக்குமெனில் அதில் சோகம் எதுவுமில்லை.
ஜெயகாந்தன்!
❤
முரண்களினாலேயே வாழ்க்கை முற்பட்டு மேலும் நகர்கிறது. என் எண்ணங்களுக்கும் என் உணர்வுகளுக்கும் ஏற்படும் முரணுக்கு தீர்வு காணாமல், ஒரு கட்டத்தில் எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன் என்னை நிலைப்படுத்திக்கொள்ள. முரணின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள மனதின் பிடியை இறுக்குகிறேன். முரண்களுக்கு முடிவு எடுத்தால்தான் வாழ்க்கை வலுவுறுமோ?