Wednesday, 28 June 2017

3 ஆம் நாள்!
5
ஆம் நாள்!
7
ஆம் நாள்!
நான் தீட்டுக் கழிப்பது 
திடம் கொள்வதற்கு...
மாதம் ஒரு முறை
மாட்சிமை அடைவதற்கு...
மாத போக்கு 
மன போக்கு சீர் செய்வதற்கு...
மாத விலக்கு
வலிமை விளங்குவதற்கு...
செங்குருதிச் சிந்துவதும்,
சிரமப்படுவதும்,
மன உலைச்சலாவதும்,
உடல் சோர்வதும்,
சினம் கொள்வதும்,
சிணுங்குவதும்,
அழகியல்! ஆம் என் பெண்மையின் அழகியல்.

அட, நான் பெண்!
பெருமிதம் கொள்வேன்!

No comments:

Post a Comment