Tuesday, 18 July 2017

எண்ணங்களான உணர்ச்சி கோபுரத்தின் மேலமர்ந்து உன்னை அரசாள அழைக்கிறேன்.
❤

Be entitled

Oh dear,

Don't be a Prince Charming, be my #Dark #Knight!

நீயும் நானும் என்பதே ஒரு அழகான பொய்.
நிரந்தரம் இல்லாதவை எல்லாம் பொய் தானே.

Marketing minor nalum valakaiyil major ah velaiaduvathu athu thaane

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மாயை நீ!
மனித ஆசைகளையும் பேராசைகளையும் பகடை ஆட்டுவிப்பதும் நீ!
பொய்யை உண்மை போல் மீளுருவாக்கம் செய்வதும் நீ!
நிரந்தரமற்ற கனவு கயவும் நீ!
புனைவும் பொருந்தாமையும் ஒருசேர நீ!
ஆழ்மனதுவரை ஆக்கிரமிப்பு செய்வதும் நீ!
உயிரற்ற உணர்வற்ற பொருளின்மேல் பித்துநிலை மாறாது வைப்பதும் நீ!

#marketing #branding #buying #thenthinkingwhy #thehellIdid #Ibuy #gimics

உன் குறுங்செய்திகள்

ஒவ்வொரு முறையும் உன் குறுங்செய்திக்குள் நீ பொதித்து அனுப்பும் அதிஅற்புத மாயங்களை எனக்கு ஏற்படும் பிரம்மிப்பு நிலையிலேயே கிரகிக்க முற்படுவேன். ஆனால் நீயோ என்னை பிரம்மிப்பிற்கும் இன்பத்திற்கும் உட்பட்ட ஆனந்தக் கூத்தாட்டத்தில் திளைக்கச் செய்து மேலும் உன் ஜாலங்களை புரிகிராய்.

அதில் நான் காணும்
உன் #மெனகெடல்களாகட்டும்,
உன் #அன்பின் #பரிசுத்தமாகட்டும்,
உன் #பித்து #நிலையாகட்டும்,
உன் #பேரன்பின் #உக்கிரமாகட்டும்,
உன் #ஆசையின் #குறியீடுகளாகட்டும். அவை அனைத்தும் பிரதிபளித்து பிம்பமாக்குவது உன் உயிரின் ஆனிவேர்வரை நீ படரவிட்டிருக்கும் எனக்கான காதலைத்தான்.

துருவமாக எண்ணிய உன்னை #ஒருபெரும் #பிரபஞ்சமாக இயைந்து நிற்கின்றாய்!!!

உன் நுட்பங்களுக்கும் நுணுக்கங்களுக்கும் பல நூறாயிரம் முறைகளேனும் என்னை கொண்டுவிட்டு கொன்று போ!
❤

Thursday, 13 July 2017

ஒரு மழைநாளில் என் வெப்பசலனம் உன் மூச்சுக்காற்று.
❤

உன்னை நினைக்கையில் உன் நினைவுகளை விட உன் வாசனையையே நிறுத்திவிட்டுச் சென்றாய் ஏன்?

நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தை கூட வேற்றோரு ஆள் கொண்டு நிரப்ப மனமில்லை. நம் நொடிகளின் நினைவுகளை மனமார்ந்து மட்டுமே உணர்ந்து மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன், அறிவினால் மிகையூட்டி கலங்கப்படுத்த விரும்பாமல். நீ விட்டுச்சென்றதைவிட விட்டுச்செல்லக் காரணமாய் இருந்த சூழ்நிலையையே நான் நொந்துக்கொண்டு வாடுகிறேன். பிரிவின் வலியை விவரிக்க எரிமலையின் தகிப்பில் ரத்த நாளங்களெல்லாம் பிளம்புகள் ஊற்றெடுக்க, வெப்பம் சோதிக்காது எரிதழல்களையும் ஏற்றுகிறேன்.

எதார்தத்தில் பழகி, ஆன்மநேய காதலில் பரிணமித்து ரசனை உச்சாடனம் புரிவோம் நாம்!

Tuesday, 11 July 2017

உயிரும் உடலும் சேர்ந்து ஆசைகளை அங்கீகரிக்க.

நினைவுகளின் நிறைவுகளாலேயே உயிர் பிறழாது நிலைத்து இருக்கிறது.

Not always strawberries are palpable. Sometimes it is the #dark #brown chocolates that are more interesting!

Being with great souls in life!

பிறருக்கு தொந்திரவு வேண்டாம் என நினைக்கும் ஒவ்வொரு உயிரும் நம் கண் முன் வாழும இறைவன்!

Living at an highly disturbing insanity level.

To live up to the hopes of little #sanity we behave highly #insane.

Imagining what if?

What if we 7.5 billion population become #environmantal #consultants and #energy #managers to nurture the Earth?

பெரியாரின் பக்கத்து ஊர் என்பதற்காவது கொஞ்சம் சிந்தையுடன் நடந்து கொள்ளுங்கள்.
#கொஞ்சம் #உரைத்திருந்தால் #கூட #மேலும் #உயர்ந்திருக்கலாம்.

World smoochies day!

அழுத்தமான ஏக்கங்களாகட்டும்.
ஆழமான எண்ணங்களாகட்டும்.
இளைப்பாரா இரவுகளாகட்டும்.
ஈரமான இச்சைகளாகட்டும்.
உன்மத்த நொடிகளாகட்டும்.
ஊடலான கூடல்களாகட்டும்.
எண்ணிலடங்கா இனிமைகளாகட்டும்.
ஏகாந்த பொழுதுகளாகட்டும்.
ஐம்மபுலங்களின் ஆச்சரியங்களாகட்டும்.
ஒருங்கிணைந்த உறவுகளாகட்டும்.
ஓயாத உணர்வுகளாகட்டும்.
ஒளடத பண்பதங்களாகட்டும்.
அஃதுணையின் அழகியல்களாகட்டும்.

நம் இவைகளுக்கு
நாம் அவைகளைத்தானே பரிசளித்தோம்.

#முத்தங்கள்.

உன் கபடமிடும் கண்களும் கோலமிடும் கைகளும் பயனற்றதாகிவிடும,் உன் சொற்களே என்னை சுகிக்கும் பொழுது.

❤
தொழுது சரணடைதலும்!
மனமுவந்து ஒப்புவித்தலும்!
❤

Fantasy காதலே சால சிறந்தது!

காவியக் காதல்களை விட காவிய கதாப்பாத்திரங்கள் உடனாக நமக்கு விரியும் கற்பனைக் காதலே பேரினபத்தின் வீதியுலா!

ஒவ்வொரு முறையும் நீ என் அறிவை தெரிவு செய்யும் பொழுது என் அழகு மேலும் கூடி மிளிர்கிறது!
❤

கடும்புனலில் முதலில் தீந்தொழிவோம் பின்பு உயிர் திரவியம் தீர்ப்போம்.

Single என்றாலும் காதல் கவிதை எழுதலாம்!

ஒன்றை உணர்தலின் பொருட்டே அழகு வெளிப்படுமன்று. கற்பனை வடிவாலும் இரசனையின் உச்சத்தை அடையலாம்.

❤Sapiosexual❤
❤Intelluctual Romanticist❤

தேடலும் தெரிவித்தலும்!

சலிக்காமல் தேடினால் தான் தெவிட்டாமல் தெரிவிக்க முடியும்.