மனம் மறைத்த மௌனம்..
உன் கூற்றுகளெல்லாம் என் உள்ளம் தொட்டாலும்.
என் உயிரை சூறையாடியது உன் மௌனம் தானே!
என் உயிரை சூறையாடியது உன் மௌனம் தானே!
உன் சமிஞ்கையெல்லாம் என்னை
சிலிர்க்க வைக்க
என் சங்கடத்தை சவுக்கடிப்பது உந்தன் மௌனம் தானே!
என் சங்கடத்தை சவுக்கடிப்பது உந்தன் மௌனம் தானே!
உன் மௌனம் மாரனைக்கும் போதெல்லாம்..
வெம்புவதும் வெதும்புவதும் என் மனம் தானே!
வெம்புவதும் வெதும்புவதும் என் மனம் தானே!
உன் மௌனத்தின் நெடி,
என் உயிரின் நாடியை அல்லவா நசுக்கியது!
என் உயிரின் நாடியை அல்லவா நசுக்கியது!
உன் மொழி மௌனிக்கும் பொழுதெல்லாம் ,
என் உயிர் மரிக்க மன்றாடியது..
பேசும் மறுகணமே,
உயிர்த்து எழவும் தடுமாறியது..
என் உயிர் மரிக்க மன்றாடியது..
பேசும் மறுகணமே,
உயிர்த்து எழவும் தடுமாறியது..
உன் மேனி என்னை
கட்டியணைக்க!!
என் மனமோ மௌனத்தை தொட்டு அணைக்க!!!
என் மனமோ மௌனத்தை தொட்டு அணைக்க!!!
இங்கு தான் உன் மௌனம் மனம்
மாறியதோ ?
இல்லை
என் இடம் தேடியதோ?
இல்லை
என் இடம் தேடியதோ?
பேச்சு தீர்ந்தபோதெல்லாம் மௌனம்
அல்ல!
பேச்சே திண்டாடும் பொழுது தான் மௌனம்!
பேச்சே திண்டாடும் பொழுது தான் மௌனம்!
சில நேரங்களை சிறப்பாக்குவதும்,
பல நேரங்களை பொருளாக்குவதும்,
இந்த மனம் மறைத்த மௌனம் தானே!
பல நேரங்களை பொருளாக்குவதும்,
இந்த மனம் மறைத்த மௌனம் தானே!
No comments:
Post a Comment