கிளர்ச்சியும் தளர்ச்சியாகாதெனின்,
வளர்ச்சியும் தொடர்ச்சியாகுமே!
வளர்ச்சியும் தொடர்ச்சியாகுமே!
யாமே என்பது சுயலாபமாகாதெனின்,
நாமே என்பது சமலாபமே!
நாமே என்பது சமலாபமே!
அக்கறை ஏனும் அவதானிக்குமெனின்,
அனுதாபமும் ஆகும் அவசியமே!
அனுதாபமும் ஆகும் அவசியமே!
பாசமே பிரபஞ்சத்தின் பெருந்தவமாகுமெனின்,
பார் போற்றும் பரவசமே!
பார் போற்றும் பரவசமே!
ஞானக்குடியை மட்டுமே நோக்கிலோமெனின்,
ஞாலக்குடியாக மாறி நேசிப்போமே!
ஞாலக்குடியாக மாறி நேசிப்போமே!
No comments:
Post a Comment