Wednesday, 28 June 2017

அன்னையர் தினம்

கடந்து வாழ்வதே கடவுள் எனில்,
அர்ப்பணித்தே அன்பு செலுத்தியவர் அன்னை தானே!
பெண்மையின் இலக்கணம் தாய்மை எனில்,
தாய்மையின் தலைவணக்கம் தங்களுக்கு தானே!
துலாபாரமே துவண்டு தான் போகும்...
உங்கள் பாசத்திற்கும் பரிவிற்கும் இடையே!
எங்கள் முற்பிறவியின் பெருந்தவத்தின் பேறே
உங்கள் மறுபிறவியின் முதல் நொடி!!!
எங்கள் உயிர் நொடி ஆனது!
உங்கள் சேய்கள் என்பதே
எங்கள் செருக்கு!
உங்கள் அன்பின் கொள்ளிடமே
எங்கள் புகலிடம்!

உங்கள் கருவறை!
எங்கள் உயிர்நிலை!

No comments:

Post a Comment