Friday, 30 June 2017

திணைகளில் நாம் குறிஞ்சியையே பாடுவோம்.
பொருகளில் நாம் உரிப்பொருளையே சுட்டுவோம்.
பெரும்பொழுதுகளில் நாம் முன்பனியையே தொடருவோம்.
சிறுபொழுதுகளில் நாம் வைகறையையே வசமாக்குவோம்.
இசைக் கருவிகளில் நாம் யாழையே வாசிப்போம்.
பிழைகளில் நாம் சந்தியையே செய்வோம்.

#குறிஞ்சியின் #உரிப்பொருளை #முன்பனியின் #வைகறையில் #யாழால் #சந்திப்போம்.

#அழுவதா? #சிரிப்பதா?

Unwanted and unexpected surge of  "increased bilateral activity within the vicinity of the middle and posterior temporal cortex, lateral cerebellum, cerebellar vermis, midbrain, putamen, and caudate(#sadness in short) trying to project a Holocaust but still trying to dump it using cognitive behavioural therapy(as usual #facebooking).

படித்து ஒரு பட்டம் கூட வாங்க இயலவில்லையே. ஒரு குரூப்பை mute செய்தத்தாலும் மெத்தனப் போக்காளும் #பட்டமளிப்பு #பரலோகம் அடைந்தது. சரி இளங்கலை தொழில்நுட்பத்தை தான் தவறவிட்டோம், முதுகலை மேலாண்மையாவது பட்டத்தை பரிசளிகட்டும்.

என் பருவ மாற்றம்!

உன்னை பற்றுவதால் ஏற்படும் என் பருவ மாற்றத்திற்கு நீ என்ன செய்ய போகிறாய்?

Thursday, 29 June 2017

Adrenaline rush for death beat!

The reverberations caused internally proving that we are still essentially raw primates when incorporated with and inclined to the high decibel percussion noise which is innately unparalleled and overlapping the insane sulked ill suited circumstances. To simply put
#இறங்கி #குத்தனும் for #குத்து #music!

Wednesday, 28 June 2017

Virtual Stalking

The power of your retina to retract things that are concurrent with the magnetic impulses repeated and focused principle to achieve the release of serotonin fooling the brain synapses to be agreeable of the lesser weird kind.
Oh!crap, to cut it short #Virtualstalking#

என் வாழ்நாளின் வரம்.

உன் உள்ள அரவணைப்பிலும்Description: https://www.facebook.com/images/emoji.php/v9/f6c/1/16/2764.png❤
உடல் அணைப்பிலும் Description: https://www.facebook.com/images/emoji.php/v9/f6c/1/16/2764.png❤
இருக்கும் வெதுவெதுப்பு!
என் வாழ்நாளின் வரம்.
Description: https://www.facebook.com/images/emoji.php/v9/f6c/1/16/2764.png❤

#கண்க் #கண்ணாடி!

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பூரணம் ஆவதற்கு பின்னும் நீ என் கண் முன்னே இருந்தே மிக முக்கியக் காரணம்.

நாம் அனைவரும் பிரபஞ்சம்! நம்முள்ளும் ஒரு பிரபஞ்சம்!!

நாம் அனைவரும் பிரபஞ்சம்!
நம்முள்ளும் ஒரு பிரபஞ்சம்!!
நாம் எதையும் வரையறுக்க வேண்டாம்!
நாம் வரையறுக்கப்படவும் வேண்டாம்!!
தேடித் தேடித் தவிக்க வேண்டாம்!
ஆசுவாசப்படுத்தி அழகுச் செய்வோம்!!
மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இலக்குகள் சார்ந்தது அன்று!
நம் வாழ்வின் இலக்கணங்கள் சார்ந்தது!!
மனமார்ந்து சிந்தித்து!
அறிவார்ந்து உணர்வோம்!!
வாழ்வை வாழ்வோம்.
சமவோம் 
இன்போம்.
இரட்சிப்போம்.

நாம் அனைவரும் பிரபஞ்சம்!
நம்முள்ளும் ஒரு பிரபஞ்சம்!!
கடற்கரை!
நள்ளிரவு!
நள தமயந்தி நாம் ஆவோமா?


நீ மாயை!

நீ மாயை!
என் நிலைப்பாட்டை வேறுபாடக்கி,
என் கோட்பாடுகளைத் தட்டுப்பாடாக்கி நிராகரிக்கிராய்!
என் விருப்பை மறுப்பாக்கி,
என் இருப்பையே வெறுப்பாக்கி வைக்கிறாய்!
என் தன்மையை பன்மையாக்கி,
என் மென்மையை வன்மையாக்கி விலகுகிறாய்!
என் புரட்சியை வறட்சியாக்கி,
என் திரட்சியை மிரட்சியாக்கி மீள்கிறாய்!

நீ மாயை!
என்னுள் எழும் எண்ணங்களை ரசிக்கும் உன்னுள் 
#சொட்டச் #சொட்ட #நான்#நனைந்தேன்
மகிழ்ந்து நெகிழ்ந்ததும்;
நெகிழ்ந்து மகிழ்ந்ததும்;
ஊடலில் கூடலும்;
கூடலில் ஊடலும்;
சத்தத்தின் யுத்தமும்;
யுத்தத்தின் சத்தமும்;
தீண்டலின் வேண்டலும்;
வேண்டலின் தீண்டலும்;
புணர்தலில் உணர்தலும்;
உணர்தலில் புணர்தலும்;

உன்னான என்னுள்ளும்;
என்னான உன்னுள்ளும்;
துருவப் பூக்களைத் தீண்டக் கரங்கள் வேண்டாம், உன் கண்ணின் கணைகளே கபளீகரம் செய்யுமே!
 பரிவர்த்தன மென்மையைப் போதுமெனக் கொண்டப்பின் தேவைக்கேற்ப ப்ரயத்தனப்படும் வன்மையும் வந்தாச்சி செய்யலாம்!
கூறிவந்த கூச்சக்க்கவிதையிலே, தாளம் போட்டுவந்த தெம்மாங்கின் தடம் தெரியலையோ?

"நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து" -கலித்தொகை.

"நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து"
-
கலித்தொகை.
அலையாய் அருகில் அமர்ந்து!
அனர்த்தங்களாய் அன்பில் அரும்புகிறாய்!
மகரந்தத்தை மட்டும் மாட்சிமைக்காது…
மடல்களை மன்றாடி மயக்கனும்!!!
நறுந்தேன் நுன் நாவினிலே!
நாணமோ நான் நவிழ்தலிலே!

களைந்து காதலில் கலந்தோமோ?
கலைந்து கலந்து கழித்தோமோ?

நீ!

நீ உயிர்ப்பிக்கும் சூழல்கள். 
நான் உயிர்த்தெழும் சுவடுகள்!
நீ தொடுத்த கடிதங்கள்.
நான் தொடரும் கமுக்கங்கள்!
நீ புனையும் கதைகள்.
நான் புலர்கின்ற கனவுகள்!
நீ ஒருங்கிணைத்த கவிகள்.
நான் ஒப்புவித்த களிகள்!

நீ தோற்றுவிக்கும் தமிழ்.
நான் போற்றுவிக்கும் எழில்!

ஆனது எப்பொழுது?

உன் வேட்கை 
என் வேள்வி 
ஆனது எப்பொழுது?
உன் கொஞ்சல்கள்
என் கெஞ்சல்கள் 
ஆனது எப்பொழுது?
உன் சிரிப்பு 
என் சித்தாந்தம்
ஆனது எப்பொழுது?
உன் சினம்
என் சிலேடை 
ஆனது எப்பொழுது?
உன் பார்வை
என் பிரபஞ்சம் 
ஆனது எப்பொழுது?
உன் உணர்வுகள் 
என் உபநிடதம்
ஆனது எப்பொழுது?
உன் உள்ளம் 
என் உலகம்
ஆனது எப்பொழுது?

ஆனது எப்பொழுது?
ஆவது இப்பொழுது!