Wednesday, 28 June 2017

நீ கடல்! நான் கடலோடி!!


நீ கடல்!
நான் கடலோடி!!
வித்தாராமும்!
முத்தாராமும்!
உலுக்கும் கலவரமும்..
உன்னத கமுக்கமும்..
ஆழி பேரலையும்!
ஆரவாரமற்ற சிற்றலையும்!
விண்ணோடு வாரியும்!!
மண்ணோடு வடித்தும்!!!
அமைதியில் ஒரு நெருடலும்…
ஆர்பரிப்பதில் ஒரு தழுவலும்…
கண்டேன்,
உன்னை பரிபூரணமாய் கண்டேன்.
அசைந்தும்,
உரைந்தும்,
அமிழ்ந்தும்,
உமிழ்ந்தும்,
கொண்டாய்
என்னை முழுவதுமாய் ஆட்கொண்டாய்.

நீ கடல்!
நான் கடலோடி!!

No comments:

Post a Comment