Wednesday, 28 June 2017

மன்மதன்

மாரவேள் மார்க்கம் 
மதிமயக்கமும் மதனமும்!
ஏவிய ஐங்கணைகள்,
ஏகாந்தம் ஐம்புலன்களில் .
தென்றல் தேரிலே..
திண்மை தீர்த்தொழிந்தாய்..
கொற்றவாளி உன் கோட்டம்.
குயிலின் கானகக் கூத்தாட்டத்தில்.
அய்யன் தவத்தை நீ குலைக்க... 
அவன் கண்ணே உன்னை உருகுலைக்க!!
ரதியின் வேண்டல். 
பதியின் உயிர்ப்பித்தல்..
உருவிலாளன் ஊழ்வினை. 
உரைத்து உயிர்ச் செய்ய.

இவள்இவன் காதல்.
இன்ப இலக்கணத்தின் இலக்கிய மோதல்.

No comments:

Post a Comment