Wednesday, 28 June 2017

அட மடப்பயலே! மடப்பயலே!

அட மடப்பயலே! மடப்பயலே!
வாழ்வின் வசந்தம் வங்கியின் வைப்புத் தானோ?
காணக் கிடைக்கா இன்பம் கடன் தானோ?
மட்டற்ற மகிழ்ச்சி மாதத் தவணைத் தானோ?
பொன்னுயிரின் பலன் பொருள் சேர்ப்பதுத் தானோ?
பருவம் பணம் செய்யத் தானோ?
வாழ்க்கை வட்டிக் கட்டுவதற்குத் தானோ?
மனிதம் மாண்பு அறியா மடமை தானோ?
அட மடப்பயலே! மடப்பயலே!

No comments:

Post a Comment