அன்பின் மிகுதியால், பாசத்தின் கொந்தளிப்பால் என் இயல்பை மாற்றி உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப என்னை கைப்பாவையாக நடத்துவது பரிசுத்தமான திணிப்பு. எத்தனை நாட்களுக்கு என்னை நானே ஏமாற்றிக்கொள்வது இந்த அன்பு, பாசம்,அக்கறை, பரிவு எல்லாம் நம் நன்மைக்கு தான் என்று. உங்கள் இந்த பாசம் என் சுயத்தை வெளிக்காட்டவே என்னை வெட்கி கூசச்செய்கிறது. அன்புசெய்தலையே இப்படி கேள்விக்கு உள்ளாக்கி மீண்டும் இந்த எண்ணத்திற்கும் வருந்தச்செய்வதே உங்கள் மேலான அன்பாக இருக்கிறது.அன்பைப்பற்றி இப்படியும் சிந்திக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி வேறு. கிடைத்தற்கரிய அன்பை பெற்றும் உணரமுடியா மனவேதனை.
No comments:
Post a Comment