நான் நானாகவே முழுமை அடைகிறேன். இருப்பினும் என் உயிர் தன் வீடு என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேடும் ஒரு கூடு நீ தான். என் வாழ்தலின் அடையாளமாகவும், நான் எச்சமாக இந்த பூமியில் உயிர்த்திருக்க ஆசைகொள்வதும் உன் வாயிலாக மட்டுமே. இதன் பொருள் நீ என்னை சுமக்க வேண்டும் என்பதல்ல நான் உனக்குள் ஒடுங்கிக்கொள்ள வேண்டும் என்பதே. என் உயிர் சலனமின்றி அமைதியாக விடுதலை வேண்டுவது உன்னுளே மட்டும் தான். என் உயிர் உலவ விரும்பும் பிரபஞ்சம் நீ.
No comments:
Post a Comment