உன் கண்ணீர் முத்துக்களை நான் ஆனந்த ஊற்றாகவே உருவெடுக்கச் செய்வேன். அந்த ஆனந்த ஊற்றை மடியில் அல்ல உயிரில் ஏந்தி நெகிழ்ச்சியாக மட்டுமே உனக்கு பரிசளிப்பேன். நீ அவளோடு அவர்களாக இருந்த தருணங்களே இப்பொழுது நீ என்னோடு நாமாக இருக்க அரும்பியது. நீ உன் கோபங்கள், வலிகள், குரோதங்கள், ஆத்திரங்கள், அனுமானாங்கள், ஆசைகள், ரசனைகள், இன்பங்கள், நெறிமுறைகள், கொள்கைகள். இவற்றின் கூட்டாக உன் ஆதிமனதை கிரகித்து அணுத்துகள் தவரவிடாமல் ஆலிங்கனம் செய்வேன். மெய்க்காதலை கவிதையாக்கி, உணர்வுகளை கதை களமாக்கி தமிழுள் தொலைந்து உயிர்காதலை இயம்புவோம்.
தமிழை மடித்து அல்ல உயிர்த்து தருகிறேன் உன்னையே உலர்த்தி எடுக்க. உன் சிறு கோபத்தின் உண்மை, சுடும் சொற்களின் நேர்மையை நன்கு புரிந்துணர்வேன். நீ உன்னை கலையாய் தீட்டும் பொழுது வண்ணங்களை சேர்க்கும் துரிகயாய் தரித்துருப்பேன். உன் உச்சியையும் உச்சத்தையும் நனைக்க உடலோடு சேர்ந்து உயிரோடு வாழ்வேன். சொல்லிட நினைத்தவை நெஞ்சோடு நிற்க, புரிதலை சுட்டிட சேர்ந்து வாழ்ந்து காட்டுகிறேன் உன்னோடு தமிழாக.
No comments:
Post a Comment