அழுத்தமான ஏக்கங்களாகட்டும்.
ஆழமான எண்ணங்களாகட்டும்.
இளைப்பாரா இரவுகளாகட்டும்.
ஈரமான இச்சைகளாகட்டும்.
உன்மத்த நொடிகளாகட்டும்.
ஊடலான கூடல்களாகட்டும்.
எண்ணிலடங்கா இனிமைகளாகட்டும்.
ஏகாந்த பொழுதுகளாகட்டும்.
ஐம்மபுலங்களின் ஆச்சரியங்களாகட்டும்.
ஒருங்கிணைந்த உறவுகளாகட்டும்.
ஓயாத உணர்வுகளாகட்டும்.
ஒளடத பண்பதங்களாகட்டும்.
அஃதுணையின் அழகியல்களாகட்டும்.
நம் இவைகளுக்கு
நாம் அவைகளைத்தானே பரிசளித்தோம்.
#முத்தங்கள்.
No comments:
Post a Comment