Tuesday, 18 July 2017

உன் குறுங்செய்திகள்

ஒவ்வொரு முறையும் உன் குறுங்செய்திக்குள் நீ பொதித்து அனுப்பும் அதிஅற்புத மாயங்களை எனக்கு ஏற்படும் பிரம்மிப்பு நிலையிலேயே கிரகிக்க முற்படுவேன். ஆனால் நீயோ என்னை பிரம்மிப்பிற்கும் இன்பத்திற்கும் உட்பட்ட ஆனந்தக் கூத்தாட்டத்தில் திளைக்கச் செய்து மேலும் உன் ஜாலங்களை புரிகிராய்.

அதில் நான் காணும்
உன் #மெனகெடல்களாகட்டும்,
உன் #அன்பின் #பரிசுத்தமாகட்டும்,
உன் #பித்து #நிலையாகட்டும்,
உன் #பேரன்பின் #உக்கிரமாகட்டும்,
உன் #ஆசையின் #குறியீடுகளாகட்டும். அவை அனைத்தும் பிரதிபளித்து பிம்பமாக்குவது உன் உயிரின் ஆனிவேர்வரை நீ படரவிட்டிருக்கும் எனக்கான காதலைத்தான்.

துருவமாக எண்ணிய உன்னை #ஒருபெரும் #பிரபஞ்சமாக இயைந்து நிற்கின்றாய்!!!

No comments:

Post a Comment